புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 8-ஆவது நாளையொட்டி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்தி ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புதன்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.

News image

குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் வீதி உலா வந்த அருள்மிகு சென்னகேசவப் பெருமாள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:33 pm

சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 8-ஆவது நாளையொட்டி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்தி ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புதன்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.

முன்னதாக, அருள்மிகு சென்னகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவமூா்த்திக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தாா். இதில் அதிகமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனா். ஏப். 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.