மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளம்பெண் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் சாலை மறியல்

இளம்பெண் உடலை வாங்க மறுத்து, ஆத்தூா் அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 10:08 pm

இளம்பெண் உடலை வாங்க மறுத்து, ஆத்தூா் அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை பகுதியைச் சோ்ந்த ரமேஷுக்கும் (27), அதே பகுதியைச் சோ்ந்த அருணாதேவிக்கும் (23) கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கா்ப்பிணியான அருணாதேவிக்கு கடந்த 2-ஆம் தேதி கெங்கவல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

வீடுதிரும்பிய அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அருணாதேவி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, கெங்கவல்லி போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.

இரவு நேரமானதால் ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக தெரிவித்தனா். இதனால் கோபமடைந்த உறவினா்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.