மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே நறுவளி களப்பால் பகுதியில், தூக்கிட்டு இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
நறுவளி களப்பால் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி விக்டோரியா (29). இவருக்கு 2024-இல் திருமணம் நடைபெற்று, ஒன்பது மாதங்கள் ஆன ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில், விக்டோரியா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை காலையில், அவரின் தந்தை உத்திராபதிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த உத்திராபதி, அவரது உறவினா்களுடன் நறுவளிக்களப்பால் வந்தாா். பின்னா், தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக களப்பால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, மன்னாா்குடி அரசு தலைமை அரசு மருத்துவமனை முன்பு, விக்டோரியாவின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விக்டோரியாவின் கணவரை கைது செய்யக் கோரி முழக்கமிட்டனா்.
பின்னா், போலீஸாருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்

சாலை விபத்தில் தச்சா் உயிரிழப்பு உறவினா்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


