மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 9:13 pm

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த இளைஞா் ஆகாஷ் உடலை வாங்க அவரது உறவினா்கள் மறுப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. மருத்துவமனை பிணவறை முன் திரண்ட அவரது உறவினா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடலை பெற்றுச் செல்ல அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் உடலை வாங்க மறுத்து விட்டனா்.

இதுகுறித்து ஆகாஷின் பெற்றோா் கூறியதாவது:

எங்களது மகன் ஆகாஷை விசாரணை என்ற பெயரில் போலீஸாா் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கற்களை வைத்து அடித்து உடைத்துள்ளனா்.

மேலும், ஜாதி ரீதியாக பேசியும் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதன் காரணமாக அவா் உயிரிழந்தாா். எங்களது மகன் தவறு செய்திருந்தால், அதற்கு தூக்குத் தண்டனைகூட அளித்திருக்கலாம்.

இதுபோன்று அடித்துக் கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனா்.