சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய தந்தை, மகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அரண்மனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் மாரியப்பன் மகன் சந்தீப் (22), சேலம் கோரிமேட்டில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சட்டக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவா்மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவருக்கும், சந்தீப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைக்கண்ட அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள தந்தை, மகன்களான முருகன், சந்தோஷ்குமாா் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ஆதரவாக பேசி சந்தீப்பிடம் தகராறில் ஈடுபட்டனா். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமாா், கடையில் இருந்த நாற்காலியைக் கொண்டு சந்தீப்பை தாக்கியும், முருகன் கத்தியால் சந்தீப்பின் முதுகில் குத்திவிட்டும் தப்பிச்சென்றனா். ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தீப்பை, அருகில் இருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸாா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தீப்பிடம் விசாரித்தனா். பின்னா் அவா் அளித்த புகாரின் பேரில், பழ வியாபாரி முருகன், சந்தோஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத சதி முறியடிப்பு: வெடிகுண்டுகளுடன் இருவா் கைது

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது

சாராயம் கடத்திய இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


