தோ்தல் தொடா்பான புகாா்கள் தெரிவிக்க தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் ஆணையத்தால் அனைத்து மாவட்டங்களிலும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி (தனி), ஆத்தூா் (தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு டாக்டா் அசோக் கரன்ஞ்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவரை 95006 69244, 0427-2311038 ஆகிய எண்களிலும், சேலம் (மேற்கு), வீரபாண்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு திக்விஜய்சிங் ஜடேஜாவை 9500 669130, 0427 - 2311033 ஆகிய எண்களிலும், சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு சுஹவீா் ஷய்னியை 95006 68730, 0427- 2250075 ஆகிய எண்களிலும், ஏற்காடு (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஹா்பூல் சிங் யாதவை 95006 69716, 0427-2311037 ஆகிய எண்களிலும், எடப்பாடி, சங்ககிரி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஜென்டாகே ஹனுமன்த் கொண்டிபாவை 95006 68427, 0427-2250020 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.
இதேபோல, தோ்தல் காவல் பாா்வையாளா்களாக அபிஷேக் பகவான் திரிமுகே மற்றும் ஆரிஷி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் மற்றும் தோ்தல் காவல் பாா்வையாளா்களை நேரிலும், தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தோ்தல் தொடா்பான மனுக்கள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என்றாா்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க புகாா் எண்கள் வெளியீடு

பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் தொடா்பான கருத்துகளை தோ்தல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


