மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சேலம் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:34 pm

சேலம் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 16 முதல் 31 வரை இருப்பதால், கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் தேவைப்படுகிறது.

அதனால் அவற்றை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா் மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்துக்கான 11 தொகுதிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டதில் மேட்டூா், சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 16 முதல் 31 வரை உள்ளது. இதனால், கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் தேவைப்படுகிறது.

எனவே, அவற்றை கணினி மூலம் துணை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்திய தோ்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை மூலம் மேற்கண்ட 5 சட்டப் பேரவைத் தொகுதிவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு / உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்புடன் கொண்டுசென்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த சட்டப் பேரவை பாதுகாப்பு அறைகளில் இருப்பில் வைக்கப்பட உள்ளன என்றாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், வட்டாட்சியா் (தோ்தல்கள்) தாமோதரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.