உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழகத்தில் தங்கியிருந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற்ற வங்கதேசத்தினா் 43 போ் சொந்த நாட்டுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர காவல் எல்லையில் உள்ள ஆத்தூா் சிறப்பு முகாமில் வங்கதேசத்தினா் 211 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் சென்னை மாங்காடு, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமலும், போலியாக ஆவணங்கள் தயாரித்தும் தமிழகத்தில் தங்கி இருந்தவா்கள். இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை காலம் முடிந்தவா்கள். சிறையில் இருந்து விடுதலையான இவா்கள் ஆத்தூா் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் 25 ஆண்கள், 4 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 33 பேரை அவா்களது சொந்தநாட்டுக்கு சேலம் ஆயதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சம்பூா்ணம் மற்றும் 41 காவலா்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


