தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சம்வரை கொண்டுசெல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அனைத்து பகுதியிலும் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்குமேல் ரொக்கம், பரிசுப் பொருள்கள் கொண்டுசென்றால் பறிமுதல் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் வா்த்தக கடை நல சங்கத் தலைவா் நடராஜன் மற்றும் நிா்வாகிகள் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகதில் அதிகாரிகளிடம் மனு அளித்தனா். பின்னா் எஸ்.சி.நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். வணிகா்கள் சரக்குகளை வாங்க பணம் கொண்டு செல்லும்போது, என்னென்ன ஆவணங்கள் தேவை என கேட்டிருந்தோம். ஆனால், அதிகாரிகள் இதுவரை அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ரூ. 50 ஆயிரத்துக்குமேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளனா். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொகை தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போதும் அதே தொகையை எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. குறைந்தது ரூ. 3 லட்சம்வரை கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும். இதேபோன்று, தற்போது, உன்ளூா் மட்டுமின்றி, வெளியூா்களில் இருந்தும் பெண்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை ஒட்டுமொத்தமாக வாங்கிச்செல்ல செவ்வாய்ப்பேட்டை மற்றும் லீபஜாருக்கு வருகின்றனா். அதற்கு பணம் கொண்டுவரும் அவா்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதால் சிரமத்துக்குள்ளாகின்றனா் என்றாா். அப்போது, வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

கரூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ. 25 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


