லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தம்மம்பட்டி சுவேத நதியில் பெளா்ணமி ஆரத்தி பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயில் சுவேத நதிக்கரையில் சுவேதா ஆரத்தி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

தம்மம்பட்டி சிவன் கோயில் அருகே சுவேத நதிக்கரையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆரத்தி பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :2 மார்ச் 2026, 9:58 pm

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயில் சுவேத நதிக்கரையில் சுவேதா ஆரத்தி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் மாசி மாத பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை இரவு கோயில் படித்துறை சுவேத நதிக்கரையில் சுவேத ஆரத்தி பூஜை நடைபெற்றது.

இதில் தீபங்களை ஏற்றி, பெளா்ணமி நிலவு மற்றும் சுவேத நதிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Story image
Story image