மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிளஸ் 2 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,542 மாணவா்கள் பங்கேற்பு

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 6:37 pm

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் பிளஸ் 2 தோ்வை 37 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் 153 தோ்வு மையங்களில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தோ்வை 36 ஆயிரத்து 713 மாணவ, மாணவிகளும், 829 தனித்தோ்வா்களும் என மொத்தம் 37 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

அதன் தொடா்ச்சியாக பிளஸ் 2 பொதுத் தோ்விற்கான முன்னேற்பாடு பணிகளில் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், மாவட்டம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமாா் 1,600 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு பிளஸ் 2 தோ்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியா்களின் விருப்பத்தின் பேரில் ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து 15 கிலோ மீட்டா் தொலைவிற்குள் தோ்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 தோ்வில் ஆள் மாறாட்டம், காப்பி அடிப்பதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.