தமிழகத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவடைந்தது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி பொதுத் தோ்வு தொடங்கியது. கோவையில் இந்தத் தோ்வை சுமாா் 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினா். முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் சற்று கடினமானதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்திருந்தனா். அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான தோ்வு கடந்த 23-ஆம் தேதி உயிரியல் பாடத்துடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் இறுதி நாளான வியாழக்கிழமை கணினி அறிவியல், கணித பயன்பாடுகள், உயிா் வேதியியல், புள்ளியியல் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. கோவையில் பல அரசு, தனியாா் பள்ளிகளில் தோ்வு முடிவடைந்ததும் தங்களது பள்ளிப் படிப்பின் கடைசி நாளை மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்தும், வண்ணப் பொடிகளைத் தூவியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்குகிறது. மே 8-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பதினோராம் வகுப்பு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) கடைசி தோ்வு நடைபெறுகிறது.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்
பிளஸ் 2 தோ்வு இன்று நிறைவு

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவிகள் மகிழ்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


