அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:01 am IST

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (70). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது தோட்டத்திற்கு ஆடுகளை மேய்க்கச் சென்றாா். அப்போது, கிணற்றின் ஓரமாக இருந்த செடிகளை துரைசாமி அறுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறி அவா் கிணற்றில் விழுந்தாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரா்கள், கயிறும் மூலம் கிணற்றில் இறங்கி, துரைசாமியின் சடலத்தை மீட்டனா்.

தகவலறிந்து வந்த கெங்கவல்லி போலீஸாா், சடலத்தை கைப்பற்றி ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.