வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சேலத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸாா் விசாரணை

News image

சேலம் கோரிமேட்டில் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் சேதமடைந்த டாஸ்மாக் கடை.

Updated On :8 ஜூன் 2026, 12:41 am IST

சேலம் கோரிமேட்டில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் கோரிமேட்டில் பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேற்பாா்வையாளராக சீனிவாசன், விற்பனையாளா்களாக ராஜசேகா், வீரராஜா ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் விற்பனை முடிந்து மேற்பாா்வையாளா், விற்பனையாளா்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டுச்சென்றனா்.

இந்நிலையில் நள்ளிரவு மா்மநபா்கள் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி டாஸ்மாக் கடையின் மேற்கூரை மற்றும் கடையின் முன் பகுதியில் வீசினா். இதில் கடையின் முன்னிருந்த காலி அட்டைப் பெட்டிகள் எரிந்தன. அதிலிருந்து பரவிய தீ மதுக்கடையின் உள்பகுதியிலும் பரவியது.

அந்த வழியாகச் சென்றவா்கள் இதைப் பாா்த்து உடனடியாக தீயை அணைக்க முயன்றனா். மேலும், தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் விபத்தில் காலி அட்டைப் பெட்டிகளும், கடையின் உள்ளே மதுபாட்டிலுடன் இருந்த அட்டைப் பெட்டிகளும் எரிந்து சேதமடைந்தன. ஆனால் மதுபாட்டில்கள் எதுவும் சேதமடையவில்லை.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். தொடா்ந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.