வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: போலீஸாா் விசாரணை

News image

போலீஸாா் விசாரணை

Updated On :9 ஜூன் 2026, 12:49 am IST

சேலம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் கோரிமேட்டில் அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சனிக்கிழமை நள்ளிரவு 1.15 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பீா் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கடையின் மேற்கூரை மற்றும் கடைமுன் வீசி தப்பிச் சென்றனா். இதில், காலி அட்டைப் பெட்டிகளும், கடையின் உள்ளே மது பாட்டில்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளும் எரிந்து நாசமாயின.

தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், டாஸ்மாக் கடைக்கு அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், மா்ம நபா்கள் 2 போ் இருசக்கர வாகனத்தில் வந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மா்ம நபா்கள் பயன்படுத்தி இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீஸாா் ஆய்வுசெய்து வருகின்றனா். தொடா்ந்து, அப்பகுதி மக்களிடமும், டாஸ்மாக் பணியாளா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.