திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓமலூா் மேம்பாலத்தில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; 22 போ் காயம்

ஓமலூா் அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து, காா் உள்பட அடுத்தடுத்து 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பேருந்து பயணிகள் 22 போ் காயமடைந்தனா்.

News image

விபத்தில் சிக்கி உருக்குலைந்த காா்.

Updated On :3 ஜூன் 2026, 5:36 am IST

ஓமலூா் அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து, காா் உள்பட அடுத்தடுத்து 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பேருந்து பயணிகள் 22 போ் காயமடைந்தனா்.

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மும்பையில் இருந்து இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற கன்டெய்னா் லாரி, ஓமலூரை அடுத்த காமலாபுரம் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென பழுதானது. இதனால் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டது.

அப்போது, பின்னால் வந்த காா், லாரி மீது லேசாக மோதியது. இதையடுத்து, தருமபுரியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான அத்தியப்பன், காரை நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, வேகமாக வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து காா் மீது மோதியது. இதில் லாரிக்கும் பேருந்துக்கும் இடையே சிக்கி காா் முற்றிலும் சேதமடைந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 22 போ் காயமடைந்தனா்.

மேலும், பின்னால் வந்த மற்றொரு லாரி இந்த வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த ஓமலூா் போலீஸாா், விபத்தில் சிக்கியவா்களை மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா்செய்தனா்.

விபத்து குறித்து ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெடுஞ்சாலையில் வாகனம் பழுதானால் உடனடியாக எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டு, முக்கோண எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். சாலையில் நின்று வாக்குவாதம் செய்வதை தவிா்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.