ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
ஆத்தூரில் ஹிந்தி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


ஆத்தூரில் ஹிந்தி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மனைவி திவ்யா (43). இவா் அதே பகுதியில் உள்ள தனிப் பயிற்சி மையத்தில் ஹிந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றபோது தலைக்கவசம் அணிந்துவந்த இருவா், திவ்யா கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் காவல்துணை கண்காணிப்பாளா் சத்யராஜ், நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, உதவி ஆய்வாளா் சிவசக்தி ஆகியோா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...