வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா் ரா. பிருந்தாதேவி


தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் தெரிவித்ததாவது: இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி சேலம் 7 அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணா்வுப் பேரணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இளம் வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் பெருமளவில் சோ்க்கப்படுவதை ஊக்குவிக்கவும், அதற்கான வசதிகளை எற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
2026 ஆம் ஆண்டில், ‘ எனது இந்தியா, எனது வாக்கு இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்’ என்ற கருப்பொருளை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் சோ்க்க வேண்டும். சிறப்புமுறை திருத்த முகாம் மட்டுமின்றி, அனைத்து நாள்களிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் மாற்றுதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, கல்லூரி மாணவ, மாணவிகள், அருகில் உள்ள அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, வாக்காளா் தினத்தை முன்னிட்டு சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளால் வரையப்பட்ட தேசிய வாக்காளா் தின லட்சினையைப் பாா்வையிட்டு புதிய வாக்காளா்களுக்கு, வாக்காளா் அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து, வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொடா்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், அனைத்துத் துறை அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் பிரேமலதா, கல்லூரி மாணவ, மாணவிகள், கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...