டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
~
Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

வாழப்பாடி, பிப்.16: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம், வேப்பிலைப்பட்டி, வெள்ளாளகுண்டம் ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி மாத மகாசிவராத்திரிக்கு மறுநாள் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுகிறது.

இக்கிராமங்களில் உள்ள மயானத்தில் மண்ணால் வடிவமைக்கப்பட்ட பெரியாண்டிச்சி காவல் தெய்வத்தை வழிபடும் நோக்கில் இவ்விழாவை மக்கள் கொண்டாடி வருகின்றனா்.

முகத்தில் கருப்பு மையை பூசிக்கொண்டு காட்டேறி மற்றும் ஆதிவாசிகள் வேடமணிந்த பூசாரிகள், பெண்களின் தலையில் முறத்தால் அடித்து பேய் விரட்டினா். அம்மன் வேடமிட்ட பூசாரி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

நோ்த்திக்கடனுக்காக பக்தா்கள் வீசிய ஆட்டுக்குட்டிகளை காட்டேறி வேடமிட்ட பூசாரிகள் ரத்தம் குடித்தனா். ஆட்டு ரத்தத்தில் பெரியாண்டிச்சி அம்மனுக்கு படைத்த பொங்கலை பிணைந்து பக்தா்களுக்கு ரத்தச்சோறு கொடுத்தனா். இந்த வினோத விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

படவரி:

சிங்கிபுரத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் காட்டேறி வேடமிட்ட பூசாரிகள்.

Story image