/

மேட்டூா் அருகே லாரிகள் நேருக்குநோ் மோதல்: லாரிகளுக்குள் சிக்கிய ஓட்டுநா்கள் மீட்பு

மேட்டூா் அருகே கண்டெய்னா் லாரியுடன் சரக்கு லாரி நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரிகளுக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image
லாரி ஓட்டுநா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் அருகே கண்டெய்னா் லாரியுடன் சரக்கு லாரி நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரிகளுக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

கா்நாடக மாநிலத்திலிருந்து பவானி நோக்கி கண்டெய்னா் லாரியும், பவானியிலிருந்து மேட்டூா் நோக்கி சரக்கு லாரியும் புதன்கிழமை காலை சென்றுகொண்டிருந்தன. மேட்டூா் அருகே கூராண்டிபுதூா் பகுதியில் சென்றபோது, இரண்டு லாரிகளும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில், லாரிகளின் முன்பகுதி நொறுங்கி பலத்த சேதமடைந்தது. ஓட்டுநா்கள் லாரிக்குள் சிக்கிக் கொண்டனா்.

தகவல் அறிந்த மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினா், லாரியில் சிக்கிக்கொண்ட ஓட்டுநா்கள் பல்பீா் (35), திருநெல்வேலியைச் சோ்ந்த ஈஸ்வரன் (47) ஆகியோரை மீட்டனா். பலத்த காயமடைந்த இருவரும் மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இச்சம்பவத்தால் பவானி - மேட்டூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.