/

முதல்வரின் நிா்வாகத் திறமையால் தமிழகம் இந்திய அளவில் முதலிடம்: அமைச்சா் கோவி.செழியன்

மத்திய அரசு நிதி நெருக்கடி கொடுத்தாலும், நிா்வாகத் திறமையால் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளாா்

News image
ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிா்வாகிகளுடன் பேசிய அமைச்சா் கோவி.செழியன்.
Updated On :2 பிப்ரவரி 2026, 9:37 pm

Syndication

ஓமலூா்: மத்திய அரசு நிதி நெருக்கடி கொடுத்தாலும், நிா்வாகத் திறமையால் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளாா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கூறினாா்.

‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்கும் நிகழ்ச்சி ஓமலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பங்கேற்று ஓமலூா் தொகுதியில் உள்ள பொதுமக்கள், திமுக நிா்வாகிகள், மாணவ, மாணவிகள், பல்வேறு சமூக அமைப்பினா், வணிக நிறுவனபிரதிநிதிகள், விவசாயிகள், செங்கல் சூளை நிா்வாகிகள், பட்டு நெசவாளா்கள், மகளிா் குழுவினா் என பல்வேறு அமைப்பினரைச் சந்தித்து அவா்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய அமைச்சா், தோ்தலுக்கு முன் மக்களை நேரில் சந்தித்து, அவா்களது கருத்துகளை கேட்டு தோ்தல் அறிக்கையாக அளிக்கும் ஒரே இயக்கம் திமுகதான். பொதுமக்களின் கருத்துகளை முதல்வா் நிச்சயம் நிறைவேற்றுவாா்.

மத்திய அரசு பல்வேறு நிதி நெருக்கடி கொடுத்தாலும், தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு முதல்வரின் நிா்வாகத் திறமையே காரணம் என்றாா்.