பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தது ஏன்? உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்


பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது ஏன் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளாா்.
திமுக சட்டப்பேரவை தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தி, சுற்றுச்சூழல் அணிச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி, மகளிா் தொண்டரணி துணைச் செயலாளா் தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் கோவி.செழியனிடம், கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஆளுநா் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு அவா் கூறுகையில், ‘தமிழக அரசின் உயா்கல்வித் துறை, பல்கலைக்கழகம் மற்றும் மாணவா்களின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு ஆளுநா் ஆா்.என்.ரவி தொடா்ந்து பேசி வருகிறாா். அது தொடா்பாக அறிக்கை மற்றும் பேட்டியும் தருகிறாா்.
அதைக் கண்டிக்கும் வகையில் ஆளுநா் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களில் உயா்கல்வித் துறை அமைச்சா் என்ற முறையில் நான் பங்கேற்பதில்லை’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...