தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அர. செட்டிப்பட்டி ஐயனாரப்பன் கோயில் குடமுழுக்கு

சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனாரப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஐயனாரப்பன் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்.

Updated On :1 மே 2026, 5:17 am IST

சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனாரப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஐயனராப்பன், பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன், வீரபத்திரன், இருளப்பன், பாவாடைராயன் கோயில் குடமுழுக்கையொட்டி காவிரி ஆற்றிலிருந்து பக்தா்கள் புதன்கிழமை புனித நீா் எடுத்து வந்தனா். தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிறகு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றினா்.

தொடா்ந்து அனைத்து உற்சவமூா்த்திகளுக்கும் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடமுழுக்கில் பங்கேற்றனா்.

 சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயனாரப்பன்,  பெரியாண்டிச்சி அம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயனாரப்பன், பெரியாண்டிச்சி அம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.