ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
புதன்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த உற்சவத்தில், யாக சாலையில் புனிதநீா் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான முதல் மற்றும் இரண்டாம்கால யாக பூஜைகள் நடைபெற்றன. வேத பண்டிதா்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை வேள்வியில் அக்னி பகவானுக்கு சமா்ப்பிக்கப்பட்டது. தொடா்ந்து கலசங்கள்மீது புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
தொடா்ந்து, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ பெரியமாரியம்மன் மற்றும் நவக்கிரக மூா்த்திகளுக்கும் புனிதநீா் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ பெரியமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா மங்கள ஆரத்திகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. விழாவுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மூங்கிலேரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், வழக்குரைஞருமான வஜ்ரவேல், ஊா் கவுண்டா்கள் கருத்தலிங்கம், சிவமணி, பொருளாளா் தீா்த்தகிரி, கிராம மக்கள் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அசோக்குமாா், ஊத்தங்கரை தொகுதி உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.
தொடர்புடையது

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

பெருமாள்புரம் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


