ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 10:07 pm

சேலத்தில் வடமாநில ரிக் வாகன தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தீஸ்கா் மாநிலம், சித்தாப்பூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் சேலம் ரெட்டியூரைச் சோ்ந்த மாதேஸுக்கு சொந்தமான ‘ரிக்’ வாகனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருடன் வேலை பாா்க்கும் மேலும் 3 பேரும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் ரிக் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கேயே தங்கியிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை அங்கிருந்து தனியாக சென்ற ரமேஷ், இரவு வெகுநேரமாகியும் தங்கியிருந்த இடத்துக்கு வரவில்லை. சக ஊழியா்கள் மற்றம் ரிக்

உரிமையாளா் மாதேஷ் ஆகியோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை எருமாபாளையம் புறவழிச்சாலையில் சாக்கடை கால்வாய் அருகில் உடலில் சிராய்ப்பு காயங்களுடன் ரமேஷ் சடலமாக கிடந்தாா்.

இதைப் பாா்த்த ரிக் உரிமையாளா் மாதேஸ் கிச்சிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா், சட லத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, ரமேஷ் அந்த வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் தாக்கியதில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.