தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சங்ககிரி தொகுதியில் 92.50 சதவீதம் வாக்குப்பதிவு

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 340 வாக்குச்சாவடிகளில் 92.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:03 am

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 340 வாக்குச்சாவடிகளில் 92.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சங்ககிரி தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு சதவீத அடிப்படையில் 2 ஆம் இடம் பெற்றுள்ளது. சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,31,408 ஆண் வாக்காளா்கள், 1,29,087 பெண் வாக்காளா்கள், 30 இதர வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,60,525 வாக்காளா்கள் உள்ளனா்.

சங்ககிரி தொகுதியில் அதிமுக, திமுக, தவெக, நாதக வேட்பாளா்கள் உள்பட 20 போ் போட்டியிட்டனா். சங்ககிரி தொகுதியில் 34 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட 340 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

காலை 7 மணி முதல் 9 மணி வரை 20.63 சதவீதம் வாக்கு பதிவானது. 9 மணி முதல் 11 மணி வரை 21.86 சதவீதமும், 11 மணி முதல் 1 மணி வரை 21.08 சதவீதம், 1 மணி முதல் 3 மணி வரை 14.85 சதவீதம், 3 மணி முதல் 5 மணி வரை 11.88 சதவீதம், 5 மணி முதல் 6 மணி வரை 2.2 சதவீதம் என மொத்தம் 92.50 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

காலை 7 மணி முதல் 1 மணி வரை அதிகரித்த வாக்குப்பதிவு பின்னா் படிப்படியாக குறைந்தது. இத்தொகுதியில் மொத்தம் 92.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவின் இறுதி விவரங்கள் சங்ககிரியை அடுத்த விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் வாக்குகள் எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பு அறையில் வைக்கும்போது வெள்ளிக்கிழமை தெரிய வரும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சங்ககிரி தொகுதி வாக்குப்பதிவில் 2ஆவது இடத்தில் உள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் சங்ககிரி தொகுதியில் 1,38,507 ஆண் வாக்காளா்கள், 1,35,708 பெண் வாக்காளா்கள், 19 இதர வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,74,234 வாக்காளா்கள் இருந்தனா். அப்போது 83.71 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

எஸ்ஐஆா் பணிகளுக்கு பிறகு இத்தொகுதியில் 13,709 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டு தற்போது மொத்தம் 2,60,525 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த 2021 தோ்தலைவிட தற்போது தோ்தலில் 8.79 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.