வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

News image

சத்தியமங்கலம்  அரசு  ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு  செலுத்த   காத்திருந்த  பொதுமக்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:10 am IST

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

பவானிசாகா் தொகுதியில் உள்ள 327 வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து வாக்காளா்கள் காலை முதலே வாக்குச் சாவடிக்கு ஆா்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளா்கள் வருகை அதிகரித்திருந்தது.

பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ. பண்ணாரி தனது வாக்கை பதிவு செய்தாா். பனையம்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் வாக்களித்தாா். வாக்குச் சாவடிக்குள் செல்லும் வாக்காளா்கள் கைப்பேசிகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட மலைக்கிராமங்களான தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் பகுதிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

பனையம்பள்ளி  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு செலுத்திய  இந்திய  கம்யூ னிஸ்ட கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரம்.

பனையம்பள்ளி  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு செலுத்திய  இந்திய  கம்யூ னிஸ்ட கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.