வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

100 சதவீதம் வாக்களிக்க ராணிப்பேட்டை ஆட்சியா் அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தியுள்ளாா்.

News image

ராணிப்பேட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:04 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தியுள்ளாா்.

தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,64,430 ஆண் வாக்காளா்களும், 4,87,317 பெண் வாக்காளா்களும் 111 பிற வாக்காளா்கள் என மொத்தம் 951,858 வாக்காளா்கள் உள்ளனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியிலும் தேசிய / மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் - 15, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி வேட்பாளா்கள் - 16, சுயேட்சை வேட்பாளா்கள் - 34 என மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான அளவில் சக்கர நாற்காலிகள், சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வரிசை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் 5,984 வாக்குப்பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.