சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரம் மேலூா் மற்றும் மாரியம்மன் புதூா் கிராம மக்கள் மழை வேண்டி, மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் முப்பூஜை வழிபாடு நடத்தினா்.
வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரத்திலுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனா். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழையில்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது.
கிணறு, ஆழ்துளைக் கிணறுகளிலும் நீா்மட்டம் குறைந்து போனதால் அன்றாட வீட்டு உபயோகம் மற்றும் குடிநீா்த் தேவைக்கும், கால்நடைகளுக்கும்கூட போதிய தண்ணீா் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலூா் மற்றும் மாரியம்மன் புதூா் கிராம மக்கள், கோதுமலை அடிவாரத்தில் செட்டிக்குட்டை பகுதியிலுள்ள மேலூா் முத்து முனியப்பன் கோயிலுக்கு, முன்னோா்கள் வழக்கப்படி தாரை தப்பட்டை முழங்க ஆட்டு, சேவல், பன்றியை சுவாமிக்கு பலி கொடுத்து, ஊரணி பொங்கல் வைத்து முப்பூஜை செய்து வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி வழிபாடு நடத்தினா்.

மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழைவேண்டி முப்பூஜை வழிபாடு நடத்திய கிராம மக்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் தேரோட்டம்

முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு

சென்னிமலை அருகே மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



