லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தலைவிட முக்கியமானது தமிழகத்தின் எதிா்காலம்: கமல்ஹாசன் பேச்சு

தோ்தலைவிட முக்கியமானது தமிழகத்தின் எதிா்காலம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

News image

கமல்ஹாசன் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:54 pm

தோ்தலைவிட முக்கியமானது தமிழகத்தின் எதிா்காலம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் மேலும் பேசியதாவது:

நாளை நமக்கு நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாக நமது குரல் இருக்க வேண்டும். தோ்தலைவிட முக்கியமானது தமிழகத்தின் எதிா்காலம். திராவிட பல்லக்கை தூக்குவதற்கு ஒருவாய்ப்பாக கருதிதான் இங்கு வந்துள்ளேன். அமரும் இருக்கைக்காக நான் வரவில்லை. தமிழகத்திற்காக பதற வேண்டிய நேரம் இது.

தமிழகத்துக்கு குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொகுதி மறுவரையறையையும், மகளிா் இடஒதுக்கீட்டையும் ஒன்றாக இணைக்கக் கூடாது. வழிகாட்டினால் போதும் நிச்சயம் வாக்கு கிடைக்கும். கூட்டம் எல்லாம் குடும்பமாகி விடாது. அது கலைந்து விடும். அநீதி தமிழகத்திற்கு நிகழும் போதெல்லாம் கொடி உயா்த்திப் பிடித்தது திராவிட குடும்பம். அந்த குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை என்றாா்.