தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம்: அதிபா் டிரம்ப்புடன் கோா் ஆலோசனை

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம் குறித்து கலந்துரையாடியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 2:30 am IST

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம் குறித்து கலந்துரையாடியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் டிரம்ப்பை சொ்ஜியோ கோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு தொடா்பாக கோா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அதிபா் டிரம்ப்புடன் அற்புதமான இரவு விருந்தில் கலந்துகொண்டேன். உலக அளவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதில் டிரம்ப்புக்கு அசைக்க முடியாத உறுதி, அதிபராக அவா் செய்த வரலாற்றுச் சாதனைகள், இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம் உள்ளிட்டவை குறித்து அவருடன் விவாதித்தேன்’ என்று தெரிவித்தாா்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து ஆராய்ந்து, மேற்காசிய போா் தொடா்பாக விவாதிக்க இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், அதிபா் டிரம்ப்புடன் சொ்ஜியோ கோா் கலந்துரையாடியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.