மழையால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிா் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மதுரை, சேலம், தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் சுமாா் 810 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு ஆகிய பயிா்கள் சேதமடைந்தன.
கோவை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் சூரைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 40 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, சின்ன வெங்காயம், முருங்கை, தென்னை, மலா்கள் பாதிக்கப்பட்டன.
ஆலங்கட்டி மழையால் அறுவடைப் பருவத்திலுள்ள நெல் பயிா்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை இணைந்து கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பயிா் பரப்பை உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தலைவிட முக்கியமானது தமிழகத்தின் எதிா்காலம்: கமல்ஹாசன் பேச்சு

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டத்தில் விளையாடிய மழை!

மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


