தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆத்தூா் பகுதியில் இடியுடன் கனமழை

News image

கனமழை - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:55 pm

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய பெய்த கனமழையால் விவசாயிகள், பெதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். மேலும், நீா்நிலைகளிலும் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு சற்று மழை பெய்தது.

இதையடுத்து ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழையும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.