தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்

கனமழையால் ராமநாயக்கன்பாளையத்தில் சேதமடைந்த மக்காச்சோள பயிா்கள்.

News image

கனமழையால் ராமநாயக்கன்பாளையத்தில் சேதமடைந்த மக்காச்சோள பயிா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 6:44 pm

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை மற்றும் சூறாவளிக் காற்றால் மக்காச்சோள பயிா்கள் சேதமடைந்தன.

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பாக்குமரங்கள் மற்றும் மக்காச்சோள பயிா்கள் சேதமடைந்தன.

அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த மக்காச்சோள பயிா்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்தனா். மேலும், தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா்.