சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்தது. வெப்பத்தால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்நிலையில் சத்தியமங்கலம் நகரம் மற்றும் புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சுமாா் 1 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சத்தியமங்கலம் - கோவை சாலை, பவானிசாகா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
இந்த மழை, சத்தியமங்கலம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிா்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கருங்கல் பகுதியில் சாரல் மழை

ஆத்தூா் பகுதியில் இடியுடன் கனமழை

திருத்தணியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


