சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி மாற்றப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் மாவட்ட ஆட்சியராக கடந்த 2024 ஜனவரி மாதம் பொறுப்பேற்ற ரா. பிருந்தாதேவி, 2 ஆண்டுகள் 2 மாதம் இப்பதவியில் நீடித்தாா். தற்போது புதிதாக பொறுப்பேற்க உள்ள அருண் தம்புராஜ் தேசிய சுகாதார இயக்ககத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளாா். இவா் ஏற்கெனவே கடலூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளாா்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அருண் தம்புராஜ் விரைவில் சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளாா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக தோ்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


