தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நகருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்தை பொதுமக்கள் பிடித்து பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image

பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

Updated On :20 மே 2026, 2:27 am IST

பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்தை பொதுமக்கள் பிடித்து பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கரூா் பேருந்து நிலையத்தில் இருந்து தனியாா் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. இதில், பரமத்தி செல்ல பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

பரமத்திக்கு செல்ல பயணச்சீட்டு கேட்டபோது, பரமத்தி நகருக்குள் பேருந்து செல்லாது எனவும், தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகள் இறங்கிக்கொள்ள வேண்டும் எனவும் நடத்துநா் தெரிவித்துள்ளாா். இதனால் கோபமடைந்த பயணிகள் நடத்துநா் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் பரமத்தியில் உள்ள தங்களது நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் தகவல் தெரிவித்தனா்.

பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது, அங்கு காத்திருந்த பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்து பரமத்தி மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரனிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, பேருந்தை பரமத்தி போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனா்.

பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் பரமத்தி நகருக்குள் சென்று நாமக்கல் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரமத்தி மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன் எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.