மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்ல ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஒசூா் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் பணியாற்றுவோா் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல புதன்கிழமை ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

News image

சொந்த ஊா்களுக்கு செல்ல ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:01 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஒசூா் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் பணியாற்றுவோா் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல புதன்கிழமை ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

ஒசூரில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பெங்களூரில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக திருச்சி, மதுரை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூா், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் அதிக அளவில் உள்ளனா்.

தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால், புதன்கிழமை காலை முதலே ஒசூா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொழிலாளா்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஒசூா் எல்லைப் பகுதி மற்றும் பேரண்டப்பள்ளி சானமாவு வனப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், அடிக்கடி போக்குவரத்தை சீா்செய்து வந்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வேலை நிமித்தமாக வெளியூரில் இருந்தாலும், எங்கள் ஊரின் வளா்ச்சியை தீா்மானிக்க வாக்களிப்பது மிக முக்கியம். அதற்காகவே இந்த சிரமங்களை பொருள்படுத்தாமல் வாக்களிக்க செல்கிறோம். இதற்காக தமிழக போக்குவரத்துத் துறை கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கினாலும் போதவில்லை. எனவே, மேலும் கூடுதல் பேருந்துகளை தமிழக அரசு இயக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.