கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூடி இருந்த பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி விடியோ பதிவிட்டு கேரள யூடியூபருக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்குக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஜித்து சாஜி என்பவர் ஒரு விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
அதில் ஒரு இளைஞர் சேலை அணிந்து பேருந்து நிலையத்திற்குள் நடனம் ஆடுவதும், இரண்டு இளைஞர்கள் பயணிகள் காத்திருப்பு பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் அருகில் நடனமாடும் காட்சியும் இடம்பெற்று இருந்தது. அந்த விடியோ வைரலானது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் எந்த அனுமதி இன்றி விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இதுபோன்ற செயல்களை காவல் துறையினர் தடுக்காமல் விட்டது, குறித்தும் விமர்சனம் கருத்துக்களைப் பலர் பதிவிட்டனர். அதோடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது போலீஸார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த விடியோவில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் முகங்களை அவர்கள் அனுமதியின்றி காட்டி திருத்தம் செய்து பதிவேற்றி உள்ளனர். அதை நீக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து காட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,
பேருந்து நிலையத்தில் நடனமாடும் விடியோ கேரளாவைச் சேர்ந்த ஜி.எஸ் மோகன் என்ற இன்ஸ்டாகிராம் ஐ.டி யில் இடம்பெற்று உள்ளது. அவர்கள் தமிழ்நாடு, கேரளம் ஆகிய பொது இடங்களில் நடனமாடி பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தி உள்ளனர். எனவே அவர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து உள்ளோம் என்றனர்.
Summary
Police summoned a Kerala YouTuber who posted a video of himself dancing to a movie song at a crowded area of the Gandhipuram bus station in Coimbatore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னமராவதிக்கு தேவை இரவு நேரப்பேருந்து சேவை!
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
திருப்பூரில் மாணவரை தாக்கிய போலீஸாா்! சமூக வலைதளங்களில் வைரலான விடியோ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



