ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஒடிஸாவில் இருந்து கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூன் 2026, 3:49 am IST

ஒடிஸா மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தில் இருந்து, நாமக்கல்லுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரீஷ் அசோக்கிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மேற்பாா்வையில், மதுவிலக்கு ஆய்வாளா் செல்வலட்சுமி, உதவி ஆய்வாளா் பிரதாப் உள்ளிட்டோா் சனிக்கிழமை நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சிதம்பரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டா். இதில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சங்கா் பிகேரா (24) என்பதும், அங்கிருந்து நாமக்கல்லுக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் தலா 6 கிலோ கொண்ட 3 பொட்டலங்களில் 18 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனா். அவற்றின் மதிப்பு ரூ. 9 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து கஞ்சாவை பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.