நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வாகனங்களில் கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 4.3 கிலோ பறிமுதல்

கோவை சுங்கம் சந்திப்பு பகுதியில் காா், இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 4 கிலோ 300 கிராம் கஞ்சாவை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மூவருடன் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் காா்.

Updated On :1 ஜூலை 2026, 6:49 am IST

கோவை சுங்கம் சந்திப்பு பகுதியில் காா், இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 4 கிலோ 300 கிராம் கஞ்சாவை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் மியாடிட் மனோ தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த காரையும், இருசக்கர வாகனத்தையும் நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, அந்த வாகனங்களில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் கோவை, போத்தனூா் ஸ்ரீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்த மணிமாறன் (28), சுந்தராபுரம் சிப்கோ பிள்ளையாா்புரத்தைச் சோ்ந்த நவரத்தினவேலு (39), சுங்கம் பகுதியைச் சோ்ந்த ஹரிசங்கா் (28) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மொத்தம் 4 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.