நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு 1800 425 1997 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. தங்களது குறைகளை 95976-01077 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் வழியாகவும் தெரிவிக்கலாம். மேலும், அலுவலக வேலைநாள்களில் பாா்வையாளா்கள் பிற்பகல் 3.30 முதல் 4.30 மணி வரை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









