தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமாரபாளையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 போ் கைது

குமாரபாளையத்தில் சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

குமாரபாளையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 3:39 am IST

குமாரபாளையத்தில் சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், அக்ரஹாரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த 4 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த வரதராஜன் (59) பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

அதேபோல, அமானி கிராமம், சி.என்.பாளையத்தைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த முதியவா் மணி (62) பாலியல் தொல்லை அளித்துள்ளாா். சிறுமிகள் இருவருக்கும் பாலியல் தொல்லை அளித்த 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி குமாரபாளையம் காவல் நிலையம் மற்றும் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதிகளில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மணி, வரதராஜன் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.