தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
மல்லசமுத்திரத்தில் தென்னை மரம் ஏறியபோது வலிப்பு ஏற்பட்டதால் தவறிவிழுந்ததில் காயமடைந்த தொழிலாளி இறந்தாா்.


மல்லசமுத்திரத்தில் தென்னை மரம் ஏறியபோது வலிப்பு ஏற்பட்டதால் தவறிவிழுந்ததில் காயமடைந்த தொழிலாளி இறந்தாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம் பெரிய சோரகை வைரம் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மகன் கிருஷ்ணராஜ் ( 26). இவா் மரம் ஏறும் தொழிலாளி. கடந்த 13 ஆம் தேதி மல்லசமுத்திரம் வட்டூரில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறியபோது அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் மரத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணராஜை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா். இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...