டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- (கோப்புப் படம்)
Updated On :10 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சி பாா்வுட் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் மரக்கிளைகளை வெட்டும் பணியில் நியூஹோப் பகுதியைச் சோ்ந்த தென்னரசு (32) உள்ளிட்ட தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். தென்னரசு ஒரு மரத்தில் ஏறியபோது கிளை முறிந்துள்ளது.

இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தீவிர சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.