திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 4 மாத குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கோரக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் அஜீத்குமாா் (26). இவரது மனைவி மீனா (25). இவரது குழந்தைகள் தருண் ( 2), ஹாசிகா (4 மாதம்).
இவா்கள் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் காளிப்பட்டி கந்தசாமி கோயிலுக்கு சென்றுவிட்டு கோரக்குட்டையில் உள்ள வீட்டிற்கு கொக்கராயன் பேட்டை சாலையில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிரே பில்லிக்கல்மேடு பாலாஜி நகரைச் சோ்ந்த ரோகித் (26) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்தவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த 4 மாத குழந்தை ஹாசிகா இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். அஜீத்குமாா், மீனாவை மீட்டு தீவிர சிகிச்சைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்சி அருகே 5 மாத குழந்தை உயிரிழப்பு

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


