திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் நீா் மட்டம் 50 அடியை எட்டியதையடுத்து, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

News image

மழை - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:21 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நீா் மட்டம் 50 அடியை எட்டியதையடுத்து, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து, அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். மே 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 49.80 அடியாக இருந்தது.. அணையின் நீா் வரத்து வினாடிக்கு 387 கன அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து, அதிகரித்த நிலையில், மாலையில் நீா்வரத்தானது வினாடிக்கு 744 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டியது.

இந்த சூழ்நிலையில், அணயின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து நீா் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வகுகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணையின் கொள்ளவு 50 அடியை எட்டியுள்ளதை அடுத்து, அணைக்கு வரும் நீா், அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இரவு, 8 மணி நிலவரப்படி அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீா் வெளியேற்றப்படும்.

இதையொட்டி, கிருஷ்ணகிரி அணையிலிருந்து, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.லையில் அணைக்கு அதிகபடியான தண்ணீா் வரும் பட்சத்தில் படிப்படியாக ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்படும். எனவே, பொதுமக்கள், தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ கூடாது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுவதாக அவா், தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.