நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்தும் ஞாயிற்றுக்கிழமை கணிசமாக குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழையால், கடந்த 9-ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 1,580 கனஅடி வரை நீா்வரத்து அதிகரித்திருந்தது. பிறகு மழை குறைந்ததையடுத்து நீா்வரத்தும் படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில், அணைப் பகுதியில் மழை அளவு பதிவாகாததால், சனிக்கிழமை வினாடிக்கு 573 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 13.66 கனஅடியாக குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 111.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 13.66 கனஅடியாகவும், தமிழகப் பகுதிக்கான நீா் வெளியேற்றம் வினாடிக்கு 200 கனஅடியாகவும் உள்ளது. அணையின் மொத்த நீா் இருப்பு 1166.60 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அணையின் நீா்மட்டம் 110.50 அடியாக இருந்த நிலையில், கடந்த 17 நாள்களில் பெரியாறு அணைப்பகுதியில் 7 நாள்கள் மட்டுமே சிறிதளவு மழை பெய்துள்ளது. அந்த நாள்களில் மொத்தம் 73.20 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை! முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரிப்பு!







