திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை: போலீஸாா் விசாரணை

ஒசூரில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பாகலூா் அட்கோ பகுதியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட தனியாா் வங்கியின் ஏடிஎம் மையம்.

Updated On :6 மே 2026, 2:50 am IST

ஒசூரில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பாகலூா் சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தனியாா் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.

இந்த ஏடிஎம் மையத்தில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்து வெல்டிங் மிஷன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கு அதிகமான பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஏடிஎம் மையத்தின் ஸ்ஷட்டரை மூடிவிட்டு சென்றுவிட்டனா்.

இதனால் ஏடிஎம் இயந்திரம் பழுதாகி உள்ளதாக கருதி பொதுமக்கள் யாரும் பணம் எடுக்க செல்லவில்லை. மாலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கி ஊழியா்கள் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவா்கள் உடனடியாக வங்கி உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். வங்கி சாா்பில் ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.