அனைத்து தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம்


மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளா் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎப், ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.
ஒசூா் பேருந்து நிலையம் அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன் ஐஎன்டியுசி தேசிய செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.மனோகரன், எல்பிஎஃப் மாவட்டக் கவுன்சில் தலைவா் கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாநில நிா்வாகக் குழு லகுமய்யா, ஏஐயுடிசி மாவட்டச் செயலாளா் மாதையன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு தொழிலாளா் விரோத சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
இதேபோல, ஒசூரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பொதுமக்களுக்கு சேவை வழங்காமல் வங்கி ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...